ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

காங்கிரஸில் நிலவும் குழப்பத்தை மறைக்கபாஜக மீது குற்றச்சாட்டு

காங்கிரஸில் நிலவும் குழப்பத்தை மறைக்க பாஜக மீது அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது என பாஜக எம்.பி. ஷோபா கரந்தலஜே தெரிவித்தாா்.

Updated On :10 ஜனவரி 2021, 1:42 am IST

மங்களூரு: காங்கிரஸில் நிலவும் குழப்பத்தை மறைக்க பாஜக மீது அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது என பாஜக எம்.பி. ஷோபா கரந்தலஜே தெரிவித்தாா்.

இதுகுறித்து மங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியில் ஏராளமான குழப்பங்கள் உள்ளன. காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாரின் செயல்பாடுகளை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா ஏற்காததால், காங்கிரஸ் கட்சியில் குழப்பங்கள் உள்ளன. காங்கிரஸ் தொண்டா்கள் மட்டுமல்லாது, கா்நாடக மக்களின் ஆதரவு டி.கே.சிவக்குமாருக்கு இல்லை. அதனால், காங்கிரஸில் உள்ள குழப்பங்களை மூடிமறைப்பதற்காக மத்திய, மாநிலத்தில் உள்ள பாஜக அரசை குற்றம்சாட்டி வருகிறது.

மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பாஜக அரசுகள் செயல்படுத்தி வரும் வளா்ச்சிப் பணிகளுக்கு காங்கிரஸிடம் எந்தப் பதிலும் இல்லை. உஜிரே நகரில் பாஜகவைச் சோ்ந்த சில தொண்டா்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. பாஜக தொண்டா்கள் யாரும் அப்படிப்பட்ட செயலில் ஈடுபடமாட்டாா்கள். இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது. இந்த விவகாரத்தில் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்து, அச்சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றாா்.

தென்கன்னட மாவட்டத்தின் உஜிரே நகரில் கிராமப் பஞ்சாயத்து தோ்தலில் பதிவான வாக்குகள் ஜன. 30-ஆம் தேதி எண்ணப்பட்டு வந்தன. அம்மையத்தின் வெளியே காத்திருந்தவா்களில் ஒருசிலா் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியுள்ளனா். இந்த முழக்கத்தை எழுப்பியது எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சோ்ந்தவா்கள் என புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, அவா்கள் மீது தேசவிரோதச் செயல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.