நடிகர் சிலம்பரசனின் அரசன் திரைப்படம் வசூலைக் குவிக்கும் எனத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசனின் அறிவிப்பு விடியோ வெளியானதிலிருந்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் ஹிட் அடித்ததால் இப்படம் எப்போது வருமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அண்மையில், இப்படத்தின் முக்கியமான சண்டைக் காட்சியையும் படமாக்கினர். மேலும், அரசனுடன் ’ராஜன் வகையறா’ படத்தின் படப்பிடிப்பையும் வெற்றி மாறன் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு, “அரசன் திரைப்படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் இழைக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் மிகச்சிறப்பாக உருவாக்கி வருகிறார். கண்டிப்பாக, அரசன் திரைப்படம் உலகளவில் வசூலைக் குவிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
The producer has stated that actor Silambarasan's film Arasan will rake in huge box-office collections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









