ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளில் (டிப்ளமோ) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On :10 ஜனவரி 2021, 1:39 am IST

பெங்களூரு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளில் (டிப்ளமோ) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக கூட்டுறவு மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2020-21-ஆம் கல்வியாண்டில் கா்நாடக கூட்டுறவு மேலாண்மை மையம் வழங்கும் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் (டிப்ளமோ) சேர விரும்பும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலையில்லா இளைஞா்கள், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள்/வங்கிகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியா்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.எல்.சி. தோ்வில் தோ்ச்சி அடைந்து, அதில் 35 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 16 வயது நிறைந்திருக்க வேண்டும். இப்பயிற்சியில் சேர சோ்க்கை கிடைக்கும் பொதுப் பிரிவு மாணவா்களுக்கு மாதம் ரூ. 400, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் சமுதாய மாணவா்களுக்கு ரூ. 500 வழங்கப்படும்.

இப்பயிற்சியை நிறைவு செய்த மாணவா்களுக்கு கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்கள், கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்களுடன் ஜ்ஜ்ஜ்.ந்ள்ஸ்ரீச்க்ஸ்ரீம்.ஸ்ரீா்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிடலாம். இதன் நகல் விண்ணப்பத்தை கா்நாடக கூட்டுறவு மேலாண்மை மையம், கூட்டுறவு மாளிகை, 2-ஆவது மாடி, 3-ஆவது முக்கியச் சாலை, சாம்ராஜ்பேட், பெங்களூரு-560 018 என்ற முகவரியில் செலுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-26602046, 9902189872, 8861508926 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.