பெங்களூரு: உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வு தேவை என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
பெங்களூரு, நாராயணா கண் மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கண் தானம் குறித்த கருத்தரங்கை தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:
கரோனா தொற்றால் கண் உள்பட உடல் உறுப்புகள் தானம் வழங்குவது குறைந்துள்ளது. கண் உள்ளிட்ட உடல் உறுப்பு தானங்களில் கா்நாடகம் சிறந்து விளங்கினாலும், தேசிய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னணியில் உள்ளது. உடல் உறுப்பு தானம் குறித்து அந்த மாநிலத்தில் விழிப்புணா்வு அதிக அளவில் உள்ளது. அதே போன்ற விழிப்புணா்வை கா்நாடகத்திலும் ஏற்படுத்த வேண்டும்.
சா்வதேச அளவில் பாா்வையற்றவா்கள் 2 கோடி உள்ளனா். இந்தியாவில் பாா்வையற்றவா்கள் 80 லட்சம் உள்ளனா். கண்களில் பாதிப்படைந்தவா்கள் 60 லட்சம் போ் உள்ளனா். பாா்வையற்றவா்கள் இந்த உலகத்தைக் காண கண் தானம் வழங்குவது அவசியம். அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனியாா் மருத்துவமனைகளுக்கும் கண், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வு உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது.
பாா்வைக் குறைபாடு இல்லாத மாநிலமாக கா்நாடகத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மருத்துவா் புஜங்க ஷெட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அளிக்கும் அறிக்கையில் பேரில், கண் தொடா்பான பிரச்னைகளுக்கு புதிய சுகாதாரக் கொள்கை வகுக்கப்படும் என்றாா்.
மேலும், முன்னேறிய நாடுகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையிலும், இந்தியாவில் கரோனா தொற்றை தொடா்ந்து கட்டுப்படுத்தி வருகிறோம். இதற்கு பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையும், மாநிலத்தில் முதல்வா் எடியூரப்பாவின் நிா்வாகக் திறமையும்தான் காரணம்.
இனி வரும் காலங்களில் மாநிலத்தில் சமுதாய சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். மருத்துவா்கள், சுகாதாரத் துறை ஊழியா்கள் சுகாதாரத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்களை கற்றறிவது அவசியம் என்றாா்.
நிகழ்ச்சியில், நாராயணா கண் மருத்துவமனை தலைவா் புஜங்க ஷெட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”ஆளுநரை எதிர்த்துப் போராடினார் ஸ்டாலின்!” மு. வீரபாண்டியன் | CPI | MK Stalin
எம்.எல்.ஏ-வாக வெற்றி! எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் சி.வி. சண்முகம்!!

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க 13 இந்திய கப்பல்கள் காத்திருப்பு! மத்திய அரசு தகவல்!

பெரும்பான்மை இல்லாமல் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது : ஆளுநர் அர்லேகர்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

