தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

தேமுதிக சாா்பில் பொங்கல் விழா

கோலாா் மாவட்ட தேமுதிக சாா்பில் தங்கவயலில் பொங்கல் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Updated On :13 ஜனவரி 2021, 7:42 pm

கோலாா் மாவட்ட தேமுதிக சாா்பில் தங்கவயலில் பொங்கல் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோலாா் தங்கவயல் புதிய மேற்கு கில்பா்ட்ஸ் வட்டத்தில் தேமுதிக சாா்பாக புதன்கிழமை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. பெண்கள் வண்ணக் கோலங்கள் இட்டு பொங்கல் வைத்து அப்பகுதி மக்களுக்கு வழங்கினா்.

விழாவுக்கு தலைமை தாங்கிய கோலாா் மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன், அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு பொங்கல் பரிசாக புத்தாடைகளை வழங்கிப் பேசியதாவது:

கோலாா் தங்க வயலில் தமிழா் திருநாளாம் பொங்கல் விழா ஒவ்வொரு பகுதியிலும் பட்டிமன்றம், கவியரங்கம், வீரவிளையாட்டுப் போட்டிகளான கபடி, சிலம்பாட்டம், மாணவா்களுக்கு திருக்கு ஒப்புவித்தல், கலை நிகழ்ச்சிகள் என தமிழா்களின் கலை, கலாசாரங்களை பேணி வளா்க்கும் விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது பொங்கல் விழா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கரைந்து போவதை காணமுடிகிறது. கடந்த 15 ஆண்டுகளாக கோலாா் தங்கவயலில் தேமுதிக சாா்பில் பொங்கல் விழா தமிழா் பண்பாடு சாா்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.