மூலிகை பற்பசைகளை ஹிமாலயா டிரக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் நேச்சுரல் ஆக்டிவ்ஸ் என்ற தொகுப்பின் கீழ் ஸ்பார்க்கிலிங் ஒயிட், ஆக்டிவ் பிரெஷ் ஜெல், சென்சிடிவ் ஆகிய பற்பசைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து நிறுவன வர்த்தக தலைமை அலுவலர் (நுகர்வோர் தயாரிப்புகள்) ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: இந்தியாவில் வாய் பராமரிப்பு சார்ந்த பொருள்களின் விற்பனை சந்தையின் மதிப்பு ரூ.,4,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு 19 சதவீத வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இதில் பற்பசை சந்தையின் மதிப்பு மட்டும் ரூ.3,500 கோடியாகும்.
இந்த சந்தையில் 2 சதவீதத்தைப் பிடிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதற்காகவே இந்த புதிய வகை பற்பசைகளை அறிமுகம் செய்துள்ளோம். மூலிகை சார்ந்த பற்பசைகளின் தொகுப்பை இப்போது அறிமுகம் செய்துள்ளோம்.
தாவர என்சைம் தொழில்நுட்ப சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் மற்றும் இயற்கையான முறையில் நன்மை பயக்கும் மூலப் பொருள்களின் வழியாக நுகர்வோருக்கு முழுமையான பல் பாதுகாப்பை வழங்குவதற்காகவும் இந்த பற்பசையை உருவாக்கியுள்ளோம்.
பற்களில் உள்ள கறைகளை அகற்ற ஸ்பார்க்கிலிங் ஒயிட்டும், துர்நாற்றம் ஏற்படுவதைத் தடுக்க ஆக்டிவ் பிரெஷ் ஜெல்லும், பல் கூச்சத்தைத் தடுக்க சென்சிடிவ் பற்பசைகளையும் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

