மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

கார் விற்பனையில் சரிவு

ஜூன் மாதத்துக்கான கார் விற்பனையில் சரிவு காணப்பட்டிருக்கிறது. தொடர்ந்து எட்டாவது மாதமாக

News image
Updated On :2 ஜூலை 2013, 4:34 am IST

ஜூன் மாதத்துக்கான கார் விற்பனையில் சரிவு காணப்பட்டிருக்கிறது. தொடர்ந்து எட்டாவது மாதமாக கார்களின் விற்பனை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

ஜூன் மாத விற்பனை புள்ளிவிவரங்களை கார் உற்பத்தி நிறுவனங்கள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதன் விவரம்:

இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸýகி, டாடா மோட்டார்ஸ், டொயோட்டா, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் கார்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மாருதி சுஸýகி இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 77,002 கார்களை விற்றுள்ளது. 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் விற்பனையானதைவிட இது 7.8 சதவீதம் குறைவாகும். இவ்வாண்டு ஜூன் மாதத்தில் டாடாவின் பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை 11,804ஆக இருந்தது. சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் 17,244 வாகனங்களை விற்பனை செய்தது இந்நிறுவனம். இது 31 சதவீத சரிவாகும்.

டொயோட்டாவின் விற்பனை 19 சதவீதம் குறைந்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸின் விற்பனை 10 சதவீதம் குறைந்திருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை 7 சதவீதம் குறைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு குறைவு, எரிபொருள் விலை உயர்வு, அதிக வட்டி, எஸ்யுவி வாகனங்களுக்கு கூடுதல் வரி விகிதம் ஆகிய காரணங்களால் தங்கள் நிறுவனத்தின் கார் விற்பனையில் சரிவு ஏற்பட்டதாக மஹிந்திரா நிறுவனத்தின் வாகனப் பிரிவு தலைவர் பிரவீண் ஷா கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதே சமயத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் மற்றும் ஃபோர்டு, ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் தங்களது கார்களின் விறபனை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளன.

மே மாதத்தில் ஒட்டுமொத்தமாக கார் விற்பனையில் 12 சதவீத வீழ்ச்சி இருந்தது. இதை தொடர்ந்து ஜூன் மாதத்திலும் விற்பனை குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.