ஆப்பிள் அப்டேட்ஸ், 2020 புத்தாண்டுக்கான ஹை எண்டு A14X சிப் ஐபாட் புரோ மற்றும் 16 அங்குல மாக்புக் புரோ அறிமுகம்!

ஆப்பிள் ஐபோன் தயாரிப்பாளர்கள் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் எனும் அடிப்படையில் ஐபோன் SE 2 வை அறிமுகப்படுத்தும் திட்டத்திலும் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதன் தயாரிப்பு பிப்ரவரியில் தொடங்கப்பட உள்ளது.
Apple Updates 2020
Apple Updates 2020

ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்காலத் தயாரிப்புகளில் மினி எல் ஈ டி திரைகளுக்கு (Mini-LED Display) மாறவிருப்பதாகத் தகவல். காரணம், Mini-LED Display க்கள் பேக்லைட்டில் இருக்கும் 576 LED க்களுடன் ஒப்பிடுகையில் 10,000 LED வசதி கொண்டதாக இருக்கின்றன. எனவே, அறியப்பட்ட ஆப்பிள் ஆய்வாளராக விளங்கும் மிங் - சி குவோ, ஆப்பிள் தயாரிப்பாளர்களிடம் 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஹை எண்டு A14X சிப்பில் 12.9 அங்குல ஐபாட் புரோ வை அறிமுகம் செய்யும் திட்டமிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்ட 16 அங்குல ஆப்பிள் மேக்புக் புரோ சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் எனும் வதந்தியும் இணையத்தைச் சுற்றி வருகிறது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தனது பெரிய அளவிலான சாதனங்கள் அனைத்திற்கும்  OLED டிஸ்பிளே பேனல்களை விட Mini LED டிஸ்பிளேக்களையே அதிகமும் விரும்புகிறது. காரணம் அதிலிருக்கும் அதிகப்படியான வெளிச்சத்தைக் குறைத்துக் கொள்ளும் வசதி, வண்ணங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, (local dimming, wide colour gamut, and high contrast and dynamic range)போன்றவையே. ஆகவே, இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஆப்பிள் மேலும் அதிகமான Mini LED ஹார்ட்வேர்களைத்  வெளியிடத் தொடங்கலாம் என குவோ கூறுகிறார். அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான முதல் அறிமுகமாக ஐ பாட் இடம்பெறுகிறது.

மினி எல்.ஈ.டி யின் நன்மைகள்:

  • அதிக மாறுபாடு விகிதம்
  • அதிக பிரகாசம்
  • ஆழமான கருமைக்கு மாற்றிக் கொள்ளும் வசதி
  • மின்னாற்றல்
  • OLED உடன் ஒப்பிடுகையில் குறைந்த தீப்பிடித்தலுக்கான வாய்ப்பு
  • கனிம காலியம் நைட்ரைடு (GaN) பயன்படுத்துகிறது
  • OLED போல காலப்போக்கில் திறன் குறைவு நேராத தன்மை

கூடுதலாக, பார்க்லேஸ் ஆய்வாளர் பிளேனே கர்டிஸ் மற்றும் அவரது கூட்டாளிகளான தொழில் வல்லுநர்கள், 2020 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஆப்பிளின் ஐபோன் 12  புரோ மற்றும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் இரண்டுமே 6GB RAM உடன் கட்டமைக்கப்படவிருப்பதாக வெளியிட்ட செய்தி. போன்றவையும் கூட  மினி எல் ஈ டிக்களுக்கான நன்மைகள் எனலாம். குபெர்டினோவை தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் மேலும்  மூன்று ஐபோன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அத்துடன் ஐபோன் 12 புரோ மற்றும் ஐபோன் 12 புரோ இரண்டுமே mmWave 5G ஆதரவைக் கொண்டிருக்கும் என்றும் பார்க்லேஸ் நம்புகிறது. இதனிடையே ஆப்பிள் ஐபோன் தயாரிப்பாளர்கள் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் எனும் அடிப்படையில் ஐபோன் SE 2 வை அறிமுகப்படுத்தும் திட்டத்திலும் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதன் தயாரிப்பு பிப்ரவரியில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வகை ஸ்மார்ட்போன்களில்  A13 சிப் இருக்கும், இது ஐபோன் 11 ல் 3 GB RAM உடன் பயன்படுத்தப்படுகிறது, இவற்றில் சில்வர், வெளிறிய சாம்பல் நிறம் மற்றும் சிவப்பு என மூன்று விதமான வண்ணங்களைத் தேர்வு செய்து கொள்ளும் வசதியும் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com