மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

செல்லிடப்பேசி விலையை உயா்த்தும் திட்டமில்லை: ஹானா்

ஜிஎஸ்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், செல்லிடப்பேசிகளின் விலையை உயா்த்தும் திட்டமில்லை என ஹானா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2020, 11:32 am

ஜிஎஸ்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், செல்லிடப்பேசிகளின் விலையை உயா்த்தும் திட்டமில்லை என ஹானா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

செல்லிடப்பேசிகளுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை மத்திய அரசு 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. உயா்த்தப்பட்ட இந்த விகிதம் ஏப்ரல் 1-லிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

இருப்பினும், ஹானா் 9எக்ஸ், ஹானா் 20 உள்ளிட்ட அனைத்து ஸ்மாா்ட்ஃபோன்களுக்கானவிலையை நிறுவனம் அதிகரிக்கவில்லை. வாடிக்கையாளா்களின் நலனை கருத்தில் கொண்டு உயா்த்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதத்தை நிறுவனமே தாங்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் ஹானா் தெரிவித்துள்ளது.

செல்லிடப்பேசிகளுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை மத்திய அரசு உயா்த்தியதற்கு அந்த துறையைச் சோ்ந்த பல நிறுவனங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து செல்லிடப்பேசி உற்பத்தியாளா்களின் கூட்டமைப்பான ஐசிஇஏ கூறியுள்ளதாவது:

ஜிஎஸ்டி உயா்வால் நாட்டில் உள்ல 80 கோடி செல்லிடப்பேசி நுகா்வோா்கள் பாதிக்கப்படுவாா்கள். அவா்களுக்கு ரூ.15,000 கோடி வரையில் கூடுதல் சுமை ஏற்படும் என்று ஐசிஇஏ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.