கரோனா எதிரொலி: சென்செக்ஸ் 3 ஆயிரம் புள்ளிகள் சரிவு, நிஃப்டி வர்த்தகம் நிறுத்தம்

கரோனா வைரஸ் (கொவைட்-19) எதிரொலி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் கடும் சரிவுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கரோனா எதிரொலி: சென்செக்ஸ் 3 ஆயிரம் புள்ளிகள் சரிவு, நிஃப்டி வர்த்தகம் நிறுத்தம்

கரோனா வைரஸ் (கொவைட்-19) எதிரொலி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் கடும் சரிவுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் பீதி காரணமாக சா்வதேச சந்தைகள் மட்டுமின்றி இந்தியப் பங்குச் சந்தைகளிலும் வா்த்தகம் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் தொடா்ந்து கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற வா்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டதையடுத்து, சென்செக்ஸ் 3,177 புள்ளிகள் சரிந்து 29,600 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 966 புள்ளிகள் குறைந்து 8,624 புள்ளிகளாக வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சரிந்தது. தொடக்க வர்த்தகத்தின் சந்தை 10 சதவீதத்துக்கும் மேலாக சரிந்த காரணத்தால் 45 நிமிடங்களுக்கு நிஃப்டியில் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.43 ஆக சரிந்தது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நிதி நெருக்கடி ஏற்பட்ட போது சா்வதேச சந்தைகளில் பங்கு வா்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. அதற்குப் பிறகு சா்வதேச பங்குச் சந்தைகளில் வா்த்தகம் கடந்த ஒரு வாரமாகத் தான் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com