இந்தியாவில் விற்பனைக்கு வந்த 'சாம்சங் கேலக்ஸி ஏ03 எஸ்' ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் தன்னுடைய புதிய படைப்பான கேலக்ஸி ஏ03 எஸ்  ஸ்மார்ட்போனை இன்று (புதன்கிழமை) இந்தியாவில் சந்தைப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆரம்ப விலையாக ரூ.11,499 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு , நீலம் , வெள்ளை என மூன்று நிறங்களில் வெளியாகிறது.

3 ஜிபி + 32 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.11,499 ஆகவும் 4ஜிபி + 64 ஜிபி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.12,499 க்கும்  விற்பனை செய்யப்பட இருக்கிறது.

கேலக்ஸி ஏ03 எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் : 6 இன்ச் தொடுதிரையில்  எச்டி , இன்பினிட்டி மற்றும் வி-பிளே இருப்பதால் மிகச்சசிறந்த காட்சி அனுபவத்தை தரவல்லது . 13 எம்பி , 2எம்பி மற்றும் 2 எம்பி கொண்ட   மூன்று கேமராக்கள் பின்பக்கமாகவும் , 5 எம்பி முன்பக்க கேமராவும் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆக்டோ - கோர் மீடியா டேக் ஹெலியோ பி 35 ப்ராசசர் மற்றும்  5000ஆம்ப் பாட்டரி வசதியையம் கொண்டிருக்கிறது.

மேலும் ஆண்ட்ராய்டு 11 இருப்பதால் யு 1 , 3.1 கோர் வசதியில் இரவு நேரத்தில் கூட துல்லியமான காட்சிகளைக் காண முடியும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

பின் எப்போதும் போல் சாம்சங் நிறுவனத்தின் செயலிகளான சாம்சங் ஹெல்த் ,சாம்சங் மெம்பெர்ஸ் மற்றும் ஸ்மார்ட் சுவிட்ச் ஆகியவையும் இடம் பெற இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com