மெய்நிகர் வணிகம் 2: கிரிப்டோகரன்சியை ஆதரிக்கும், எதிர்க்கும் நாடுகள்

எல் சால்வடார் நாடு கடந்த சில மாதங்களுக்கு முன் கிரிப்டோகரன்சி வணிகத்தை அனுமதித்ததோடு பிட்காயினை நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாகவும் அறிவித்தது
மெய்நிகர் வணிகம் 2: கிரிப்டோகரன்சியை ஆதரிக்கும், எதிர்க்கும் நாடுகள்
மெய்நிகர் வணிகம் 2: கிரிப்டோகரன்சியை ஆதரிக்கும், எதிர்க்கும் நாடுகள்

உலகில் பெரும்பாலான நாடுகளில் இன்று கிரிப்டோகரன்சி வணிகம் தீவிரத்தன்மைய அடைந்திருக்கிறது. குறிப்பாக, ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் இணைய வசதிகளைப் பொருத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்றைய நிலவரப்படி பல லட்சம் கோடிகளில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் இருந்தாலும் அரசிற்கு எந்தவிதத்திலும் வருவாயை கொடுக்காதது என்பதால் பல நாடுகள்  கிரிப்டோகரன்சியைத் தடை செய்திருக்கிறார்கள். அதே நேரம் சில நாடுகள் அதை செல்வாணியாகக் கருத்தில் கொண்டு நீண்ட கால முதலீடு அடிப்படையில் வரியைப் பெருகிறார்கள்.

அமெரிக்காவின் ஆதரவும், தடையும்:

ஒப்பீட்டளவில் இந்தியாவிற்கு அடுத்து அமெரிக்காவில் தான் கிரிப்டோகரன்சியில் அதிகம் முதலீடு செய்தவர்கள் இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. பில்லியன் டாலரைக் கொண்டு நடக்கும் இந்த வர்த்தகத்தை அமெரிக்காவின் சில மாகாணங்கள் நெறிமுறைப்படுத்தியும் மற்ற மாகாணங்கள் சட்டமில்லாத அனுமதியும் வழங்கியிருக்கிறார்கள்.

தடையை நீக்காத சீனா:

அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் ஆரம்ப காலத்தில் கிரிப்டோ வணிகம் பலரை உள்ளிழுத்ததுடன் பெரும் முதலீடுகளையும் பெற்றது. பின் , கிரிப்டோகரன்சியின் ஆபத்தை உணர்ந்து சீனாவில் தற்போது முழுமையாக அதற்குத் தடை வழங்கியதுடன் அதை நிர்வகித்து நடத்தும் செயலிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

கிரிப்டோ வணிகத்தில் வரி:

கிரிப்டோகரன்சி வணிகம் பல நாடுகளில் ஆதரவில்லாமல் நடைபெற்று வருவதால் அந்த அரசாங்கத்திற்கு இதன் மூலம் எந்த விதமான வரிகளும் செல்வதில்லை. குறிப்பாக பல நாடுகள் கிரிப்டோவில் முதலீடு செய்வதை ஒரு ‘சொத்தாக’ பார்க்காததுதான் இதற்கான காரணம். இருந்தாலும் ,  இஸ்ரேலில் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் கிரிப்டோகரன்சியின் பங்குகளை வைத்திருந்து அதை விற்பனை செய்தால் அரசிற்கு 25 % வரை வரி செலுத்த வேண்டும்.

இந்தியாவில் கிரிப்டோகரன்சியின் நிலை:

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் கிரிப்டோ வணிகத்தில் ஈடுபடுவதாகவும் 10,000 கோடிக்கும் மேல் அதில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் , இந்தியாவில் கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டுத்தொடரில் கிரிப்டோகரன்சி தடை மசோதா நிறைவேற்றப்படும் என அறிவித்திருந்தனர்.ஆனால், தடை குறித்தோ ஆதரவு குறித்தோ எந்த நிலைப்பாடும் எடுக்கப்படவில்லை. 

கிரிப்டோவை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு

எல் சால்வடார் நாடு கடந்த சில மாதங்களுக்கு முன் கிரிப்டோகரன்சி வணிகத்தை அனுமதித்ததோடு பிட்காயினை நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாகவும் அறிவித்தது. இதுவே பிட்காயினை அங்கீகரித்த உலகின் முதல் நாடு.

என்னதான் கிரிப்டோ வணிகம் நல்லது, அது தனிநபர் விருப்பம் அதில் அரசு தலையிடுவது சரியல்ல என ’கிரிப்டோவாசிகள்’ கருத்து தெரிவித்தாலும் சீனா, வங்கதேசம், வியட்நாம், எகிப்து, ரஷியா, ஈக்குவடார், மோராக்கோ, பொலிவியா, துருக்கி, கத்தார் போன்ற நாடுகளில் கிரிப்டோகரன்சி வணிகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com