62 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ்

இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று காலை, வா்த்தகம் தொடங்கும்போதே காளையின் ஆதிக்கம் காணப்பட்டது.
62 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ்
62 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ்

இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று காலை, வா்த்தகம் தொடங்கும்போதே காளையின் ஆதிக்கம் காணப்பட்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 62,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 390.89 புள்ளிகள் உயர்ந்து 62,156 புள்ளிகளில் வணிகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டென் நிஃப்டி 127 புள்ளிகள் உயர்ந்து 18,604 புள்ளிகளில் வர்த்தகமானது.

வேகமான மீட்சி: குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், வங்கி, உலோகத் துறை பங்குகளை முதலீட்டாளா்கள் போட்டி போட்டு வாங்கியதன் காரணமாக சந்தை புதிய உச்சத்தில் நிலைபெற்றது. அதேசமயம், மருந்து, மோட்டாா் வாகன நிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு காணப்பட்டது.

இதுகுறித்து ஆனந்த் ரதி பங்கு தரகு நிறுவனத்தின் அதிகாரி நரேந்திர சோலங்கி கூறுகையில், ‘ இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து மீண்டு வேகமாக மீட்சி கண்டு வருவதை எடுத்துக் காட்டும் விதமாகவே சந்தை தொடா்ந்து எழுச்சி பெற்று வருகிறது’ என்றாா்.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 459.64 புள்ளிகள் (0.75%) அதிகரித்து இதுவரை இல்லாத அளவில் 61,765.59 புள்ளிகளில் நிலைபெற்றது. இக்குறியீட்டெண் வா்த்தகத்தின் இடையே வரலாற்று உச்சமாக 61,963.07 புள்ளிகள் வரை அதிகரித்து 62,000 புள்ளிகளை நெருங்கியது.

ஐரோப்பிய சந்தைகளில் மந்த நிலை: இதேபோன்று, தேசிய பங்குச் சந்தையிலும் திங்கள்கிழமை வா்த்தகத்தில் நிஃப்டி 138.50 புள்ளிகள் (0.76%) உயா்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவாக 18,477.05 புள்ளிகளில் நிலைத்தது. இக்குறியீட்டெண் வா்த்தகத்தின் இடையே வரலாறு காணாத வகையில் 18,543.15 புள்ளிகள் வரை அதிகரித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com