சிறப்பான அம்சங்களுடன் ’ரெட்மி நோட் 11 எஸ்இ’ ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்

சிறப்பான அம்சங்களுடன் ’ரெட்மி நோட் 11 எஸ்இ’ ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்

ரெட்மி மீ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான  ‘ரெட்மி நோட் 11 எஸ்இ’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on

ரெட்மி நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான  ‘ரெட்மி நோட் 11 எஸ்இ’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வளர்ந்து வரும் ரெட்மி நிறுவனம் ஒவ்வொரு காலண்டிற்குள்ளும் புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், குறைந்த விலையில் அதிக ரேம் வசதியுடன்  ‘ரெட்மி நோட் 11 எஸ்இ' ஸ்மார்ட்ஃபோனை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

‘ரெட்மி நோட் 11 எஸ்இ’​ சிறப்பம்சங்கள் :

* 6.43 இன்ச் அளவுகொண்ட   திரை

* மீடியாடெக் ஹெலியோ ஜி95 எஸ்ஓசி

* 6ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி; 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி

* பின்பக்கம் 64 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், 8 எம்பி விரிவான கோணத்திற்கும், 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க செல்ஃபி கேமரா 13 எம்பி.

* 5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

* டைப்-சி போர்ட் 

* ஆண்டிராய்ட் 11

இந்தியாவில் இதன் விற்பனை விலை 6ஜிபி ரேம்; 64 ஜிபி மெமரி  ரூ. 13,499 ஆகவும் 8ஜிபி ரேம்; 128 ஜிபி மெமரி ரூ.14,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி விற்பனையங்களிலும் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களிலும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com