’ஜியோ 5ஜி’ ஸ்மார்ட்ஃபோன் விரைவில் அறிமுகம்: என்ன விலை?

ரிலையன்ஸ் குழுமம் ஜியோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
’ஜியோ 5ஜி’ ஸ்மார்ட்ஃபோன் விரைவில் அறிமுகம்: என்ன விலை?

ரிலையன்ஸ் குழுமம் ஜியோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. அதில் தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையையும் 5ஜி தொழில்நுட்பத்துக்கு முக்கியமாகக் கருதப்படும் 700 மெகா ஹொ்ட்ஸ் அதிா்வெண் கொண்ட அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து, நாட்டில் அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் ஐந்தாம் தலைமுறை (5ஜி) சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும், இதன் சேவை 2 அல்லது 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷணவ் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜியோ நிறுவனம் 5ஜி சேவையையும் அதற்கான ‘ஜியோஃபோன் 5ஜி’ என்கிற புதிய ஸ்மார்ஃபோனையும் இந்தியாவில் வருகிற ஆக.29 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வேகமான இணையச் சேவையைத் தாங்கும் இந்த ஸ்மார்ட்ஃபோனின் விலை ரூ.9,000-லிருந்து ரூ.12,000 வரை இருக்கலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

‘ஜியோஃபோன் 5ஜி’​ சிறப்பம்சங்கள் : (தகவல்)

* 6.50 இன்ச் அளவுகொண்ட திரை

* ஸ்னாப்டிரகன் 480 எஸ்ஓசி

* 4ஜிபி ரேம் மற்றும் 38 ஜிபி மெமரி

* பின்பக்கம் 13எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க செல்ஃபி கேமரா 8 எம்பி.

* 5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

* ஆண்டிராய்ட் 11 (கோ எடிசன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com