
ரஷியா-உக்ரைன் இடையேயான போரில் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் இழப்பைச் சந்தித்து வரும் வேளையில் இந்தியப் பங்குச் சந்தை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.
நேற்று (பிப்.23) 57,232.06 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 55,418.45புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 2,702 புள்ளிகளை இழந்து 54,529.91 புள்ளிகளுடன் நிலைபெற்றது.
அதேபோல், 17,063.25 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 16,548.90 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 815.3 புள்ளிகள் இழந்து 16,247.95 புள்ளிகளில் நிலைபெற்றது.
இந்தியச் சந்தைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, எச்டிஎஃப்சி, பஜாஜ் பினான்ஸ் ஆகிய பங்குகளின் மதிப்புகள் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அதே நேரம் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் மதிப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும், போர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் பங்குச் சந்தைகள் மேலும் கடுமையான சரிவைச் சந்திக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.