புழல் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை குளித்த, அரசு பஸ் நடத்துநர், மகனுடன் நீரில் மூழ்கி இறந்தார்.
செங்குன்றம் அருகே ஆட்டந்தாங்கள் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (49). மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் மனைவி ரேவதி (35), மகன் ஜீவரத்தினம் (14) மகள் பவானி, மனைவியின் தங்கை பழனியம்மாள், அவரது குழந்தைகள் கெüசல்யா, நந்தகுமார் ஆகியோர் புழலேரி ஆலமரம் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, செல்வம் தனது மகன் ஜீவரத்தினத்திற்கு நீச்சல் கற்றுத்தர ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கிய இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர்.
தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு படைவீரர்கள் புழலேரிக்கு சென்று செல்வம் சடலத்தை மீட்டனர். திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் ஜீவரத்தினம் சடலம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து செல்வத்தின் மனைவி ரேவதி செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். வழக்கைப்பதிவு செய்த சப்இன்ஸ்பெக்டர் சத்தீஷ், இருவரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டேன்லி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



