தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

வாகன சோதனையில் விபத்து: சப்-இன்ஸ்பெக்டர், இளைஞர் காயம்

சென்னை சேத்துப்பட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை வாகனச் சோதனைக்காக தடுத்தபோது கீழே

Updated On :2 ஏப்ரல் 2013, 4:43 am IST

சென்னை சேத்துப்பட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை வாகனச் சோதனைக்காக தடுத்தபோது கீழே விழுந்து காயமடைந்தார். அவரை தடுத்து நிறுத்த முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும் தடுமாறி விழுந்து காயமடைந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சேத்துப்பட்டு மங்காளபுரத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (25). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சேத்துப்பட்டு சத்தியமூர்த்தி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனை செய்துக் கொண்டிருந்த போலீஸார், அவரை நிறுத்த முயன்றனர்.

போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக மனோஜ்குமார், சாலையின் ஓரமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சாலையோர தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதியில் மனோஜ்குமார் காயமடைந்தார்.

அதேவேளையில் அவரை தடுக்க முயன்ற சேத்துப்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நித்யானந்தம் தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தார்.

மனோஜ்குமார் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், நித்யானந்தம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து சேத்துப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.