தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

கிணற்றுக்குள் விழுந்த வாகனம்.

Updated On :15 ஜூன் 2026, 9:14 am IST

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தின் மல்ஷிராஸ் வட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை பிக்கப் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரக் கிணற்றில் விழுந்தது. இந்த சம்பவத்தில் நான்கு பெண்கள், நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் பலியாகினர். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.

பந்தர்பூரைச் சேர்ந்த, பெரும்பாலும் உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களான 15 பேர், மஸ்வதில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​தந்துல்வதி கிராமம் அருகே இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் ஏழு பேர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

Summary

Eight people, including four women and four children, were killed while seven others were injured on Sunday when a pick-up vehicle carrying them plunged into a roadside well in Malshiras tehsil in Solapur district, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.