ஹிமாசலில் வாகனம் மீது ராட்சதப் பாறை விழுந்ததில் குழந்தை உள்பட 13 பேர் பலியாகினர்.
ஹிமாச்சல பிரதேச மாநிலம், சம்பா மாவட்டத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மலையின் ஒரு பகுதி திடீரெனச் சரிந்து ராட்சதப் பாறை அவ்வழியாக சென்ற வாகனம் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 6 மாதக் குழந்தை உள்பட 13 பேர் பலியாகினர்.
மேலும் இருவர் காயமடைந்தனர். பாறைகள் விழுந்ததைத் தொடர்ந்து, வாகனத்தின் பின்பகுதி தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள் மற்றும் ராணுவத்தினர் தீயை அணைக்க முயன்றனர். வாகனம் தீயில் எரிந்து சிதைந்துபோன நிலையில் காட்சியளிக்கும் விடியோக்களும் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
விபத்து குறித்த தகவல் கிடைத்த உடனேயே ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குலுவிலிருந்து கில்லருக்குச் சென்று கொண்டிருந்த அந்த எஸ்யூவி ரக வாகனத்தில் மொத்தம் 15 பேர் பயணம் செய்தனர்.
Summary
Thirteen people were killed while two others had a narrow escape after massive boulders from a nearby hill suddenly fell onto a moving taxi on the Udaipur-Pangi road in Himachal Pradesh's Lahaul Spiti on Friday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏற்காட்டில் இருசக்கர வாகனத்தின் மீது காட்டெருமை மோதியதில் இருவா் காயம்

சீனாவில் கடும் வெள்ளம்: 39 பேர் பலி; 1,30,000 பேர் வெளியேற்றம்!

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay




