மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி தலைமையில் மாணவா்கள்-இளைஞா்கள் தில்லி ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் மாணவர்கள் ஆங்காங்கே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடற்கரை சாலை மற்றும் அம்பேத்கர் மணி மண்டபம் அருகே ஒன்று கூடி மாணவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கடற்கரை சாலை முழுவதும் தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டு பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடற்கரை சாலைக்கு வந்த பொது மக்களையும் போலீஸார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
Summary
Following continuous protests by students, the Puducherry Beach Road has been closed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கலை ஒற்றுமையை உருவாக்கும்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரி கடற்கரையில் இன்று சுதந்தின தினவிழா: தேசியக் கொடியேற்றுகிறாா் முதல்வா் ரங்கசாமி

ஜார்க்கண்ட்டில் என்ன நடக்கிறது? ஜென் ஸீக்களின் கலகம் வெற்றி பெறுமா?

தண்டவாளத்தில் சேதம்... சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு!
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |




