கோயில் காவலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது.
ஊத்துக்குளியில் உள்ள கோயில் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றிய முருகசாமி என்பவர் 2004 ஆம் ஆண்டு கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார். கோயிலின் பொருள்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக சங்கர், ரமேஷ் என்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஈரோடு விரைவு நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் ஆகியோர் சங்கர், ரமேஷ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டனர்.
கோயில் காவலாளியை இவர்கள் 2 பேரும் கொலை செய்தனர் என்பதையோ, கோயில் பொருள்களை இவர்கள்தான் கொள்ளையடித்துச் சென்றனர் என்பதையோ நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. ஆகவே, இருவருக்கும் கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


