சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மே 15-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
வடசென்னையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேச உள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
50 சதவீதத்துக்கும்மேல் பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திமுக சார்பில் எழுச்சி நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
மே 15-ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்தக் கூட்டங்கள் நடைபெறும். வடசென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார்.
பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடலூரிலும், பொருளாளர் மு.க.ஸ்டாலின் கரூரிலும், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் கோவையிலும் பேச உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






