திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ரயில்வே அதிகாரி வீட்டில் திருட்டு

சென்னை கொளத்தூரில் ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ. 1.6 லட்சம் திருடப்பட்டது.

Updated On :1 மே 2013, 11:40 pm

சென்னை கொளத்தூரில் ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ. 1.6 லட்சம் திருடப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கொளத்தூர் பாபா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவர் ஐ.சி.எப். ரயில் பெட்டித் தொழிற்சாலையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் மகள்கள் யுவராணி, கஸ்தூரி. யுவராணி அழகு நிலையத்தில் பணியாற்றுகிறார். கஸ்தூரி கல்லூரியில் படித்து வருகிறார்.

விஜயராகவன் தனது மனைவியுடன் 2 நாள்களுக்கு முன் தனது சொந்த ஊருக்குச் சென்று விட்டார். வீட்டில் அவரது மகள்கள் மட்டும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு யுவராணி வேலைக்கும், கஸ்தூரி கல்லூரிக்கும் சென்று விட்டனர். மாலையில் யுவராணி வீட்டுக்கு வந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் பீரோவை உடைத்து பணம் எடுப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

யுவராணியைப் பார்த்ததும் அந்த மர்ம நபர், ஏற்கனவே உடைத்து வந்திருந்த பின்பக்க கதவு வழியாக தப்பி ஓடி விட்டார். பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த ரூ 1.6 லட்சம் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்

தார்.

இது குறித்து ராஜாமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.