நடிகர் ரஜினிகாந்த்தை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை நேரில் சந்தித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் அவரை நேரில் சந்தித்த நயினார் நாகேந்திரன், பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியின் முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான புத்தகத்தை வழங்கினார்.
இந்த சந்திப்பு புகைப்படங்களை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் பதிவிட்டிருப்பதாவது:
இன்று சென்னை போயஸ் தோட்டத்தில், தாதாசாகெப் பால்கே விருது பெற்ற இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார், பத்மபூஷன் ரஜினிகாந்த்தை, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான அரவிந்த் மேனனுடன் இணைந்து மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 12 ஆண்டுகால மக்கள் நல ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களை அவருக்கு வழங்கி மகிழ்ந்தோம்.

இந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் கராத்தே தியகராஜன் மற்றும் மாநில பிரச்சாரப் பிரிவு அமைப்பாளர் பாண்டியராஜ் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
TN BJP State President Nainar Nagendran meets actor Rajinikanth!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

மாரிதாஸ் கைது: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

மோடி குறித்து அண்ணாமலை எழுதியது! வாசித்துக்காட்டிய நயினார் நாகேந்திரன்








