ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வில்லிவாக்கத்தில் நகை, பணம் திருட்டு

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது.

Updated On :11 ஜூன் 2013, 9:12 pm

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது.

வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் நகரைச் சேர்ந்த சகோதரர்கள் தேவராஜ், தாமோதரன். இதில் தாமோதரன் தனியார் வங்கியில் செக் கலெக்ஷ்ன் ஏஜென்டாக பணிபுரிகிறார். இருவரும் குடும்பத்துடன் திங்கள்கிழமை இரவு மொட்டை மாடியில் தூங்கினார்களாம். நள்ளிரவு 2.30 மணிக்கு கீழே வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு 19 சவரன் நகை, ரூ. 30,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த வீட்டில் 2 டால்மேஷன் வகை நாய்கள் உள்ளன. வெளியாட்கள் நுழைய முடியாத அந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்கு தெரிந்தவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.