இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சென்னை நகர நதிகள் சீரமைப்பு: மக்களிடம் இன்று கருத்துக் கேட்பு

சென்னை மாநகர நதிகள் மற்றும் நீர் நிலைகள் சீரமைப்பு குறித்து பொதுமக்களிடம் புதன்கிழமை கருத்துக் கேட்கப்பட உள்ளது.

Updated On :12 ஜூன் 2013, 4:21 am IST

சென்னை மாநகர நதிகள் மற்றும் நீர் நிலைகள் சீரமைப்பு குறித்து பொதுமக்களிடம் புதன்கிழமை கருத்துக் கேட்கப்பட உள்ளது.

இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை கூட்ட அரங்கில் புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

சென்னை மாநகர நதிகள் மற்றும் நீர் நிலைகளைச் சீரமைக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, ஒருங்கிணைந்த கூவம் நதி சீரமைப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்த பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு கூவம் நதி சீரமைப்பின் பெருந்திட்ட வரைவு தயாரிக்கும் பணிக்கு கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என்று சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.