ஆவடியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருடுபோயுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஆவடி ஜெ.பி.எஸ். தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி குமரன் (37). இவரது மனைவி இந்துமதி (34). குமரன் வியாழக்கிழமை காலை வேலைக்குச் சென்றுவிட்டார்.
இந்துமதி தனது குழந்தையை மாலையில் பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 25 பவுன் தங்கநகை திருடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








