பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!

அதிமுக எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது பற்றி...

viralimalai ADMK MLA C vijayabaskar resigns his MLA post

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரைச் சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கிய சி. விஜயபாஸ்கர் - X

Published On :

விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது.

எஸ்.பி. வேலுமணி அணியில் சி. விஜயபாஸ்கரும் இருந்தார். இதன்பின்னர் பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்தன.

இதனிடையே அதிமுகவின் ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகிய 4 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தொகுதி மக்களின் முடிவுக்கேற்ப தனது முடிவை அறிவிப்பதாகக் கூறி வந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எக்ஸ் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரைச் சந்தித்து அவர் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

விஜயபாஸ்கரின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.

"சட்டமன்றப் பேரவை விதி 21-இன் படி விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார்.

அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்டமன்றப் பேரவை விதி 22-இன் படி முறையாக உள்ளதால் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று பேரவைத் தலைவர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

Story image

எடப்பாடி பழனிசாமியிடம் விஜயபாஸ்கர் மன்னிப்புக் கடிதம் கொடுக்கப்பட்ட பிறகும் அவருடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவரிடமிருந்து பறித்த புதுக்கோட்டை மாவட்டச் செயலர் பதவியும் அவருக்கு திருப்பி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

விஜயபாஸ்கர் தொடர்ந்து தவெகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுகுறித்து அவர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா காலத்தில் அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். இவர் விராலிமலை தொகுதியில் இருந்து 4 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

viralimalai ADMK MLA C vijayabaskar resigns his MLA post

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.