அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது தொடர்பான புகாரில் விளக்கமளிக்க நால்வருக்கும் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழக பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெறாத தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இவர்களில் 21 பேர் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பினர்.
ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகிய 4 பேரும் அதிமுகவில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
21 பேரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால் அவா்களை மன்னித்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததையடுத்து அந்த 21 பேர் மீதும் எந்த தகுதிநீக்க நடவடிக்கையும் இல்லை என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.
அதேநேரத்தில் ராஜிநாமா செய்த நால்வர் மீதும் நடவடிக்கை தொடரும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நால்வர் மீதான கட்சித் தாவல் தடைச் சட்ட புகார் இன்னமும் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுக்கு பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
'எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தது ஏன்? உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?' என ராஜினாமா செய்த நால்வருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் 7 நாட்களில் அவர்கள் விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Summary
TN Speaker issues notices to the four MLAs who resigned
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! 21 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்
அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர் தகவல்

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த 3 பேர் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!

நகா்மன்ற உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்த பண்ருட்டி எம்எல்ஏ
விடியோக்கள்

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics



