கட்சித் தாவல் புகார் தொடர்பாக ராஜிநாமா செய்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் பேரவைத் தலைவர் முன்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமாரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இவர்கள் மீது அதிமுக அளித்த புகாரில், தகுதிநீக்கம் தொடர்பாக பேரவைத் தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அதன்படி, அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இன்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் முன்பு ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.
அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Defection complaint: Former MLAs offer explanation to the Speaker
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்எல்ஏக்கள் ராஜிநாமா ஏற்புக்கு எதிராக அதிமுக வழக்கு: 4 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்த தடை விதிக்கவும் கோரிக்கை
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தது ஏன்? 4 பேருக்கும் பேரவைத் தலைவர் நோட்டீஸ்!

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவா் உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! 21 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



