தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி என இரு அணிகளாகப் பிரிந்த நிலையில் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இரு அணிகளும் ஒன்றிணைந்தது.
கடந்த மே 27 அன்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த எஸ்.பி. வேலுமணி தரப்பினர், கொறடாவின் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவளித்ததற்கு வருத்தம் தெரிவித்து, முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை இபிஎஸ் தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், எஸ்.பி. வேலுமணி தரப்பு கொறடா சி. விஜயபாஸ்கரும் நேரில் சந்தித்து, தாங்கள் அளித்த புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜே.சி.டி. பிரபாகர், தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஜே.சி.டி. பிரபாகர் பேசியதாவது:
”அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய நான்கு கடிதங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. அவரின் கடிதங்களில் 13.5.2026 அன்று 21 உறுப்பினர்கள் வாக்களித்ததை மன்னிப்பதாக கூறியதால், இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன்.
மேலும், 21 உறுப்பினர்கள் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் அரசியலமைப்புச் சட்டம் பத்தாவது அட்டவணையின் கீழ் கைவிடுகிறேன்.
மொத்தமுள்ள 25 பேரில் 21 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 உறுப்பினர்கள் தகுதிநீக்கம் தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
விதியின் படி, 30 நாள்களுக்குள் மன்னிப்பு வழங்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் கடிதம் வழங்கியதால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதிமுகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தொடர்பாக எந்த கடிதமும் இன்னும் அளிக்கப்படவில்லை.
தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தது செல்லுபடியாகும்.” எனத் தெரிவித்தார்.
Summary
No disqualification of AIADMK MLAs — Assembly Speaker JCD Prabhakar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர் தகவல்

பேரவைத் தலைவருடன் சி. விஜயபாஸ்கர் சந்திப்பு! கடிதம் வாபஸ்!
அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!
தமிழ்நாடு பேரவைத் தலைவராகிறார் ஜே.சி.டி. பிரபாகர்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




