சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

எம்எல்ஏக்கள் ராஜிநாமா ஏற்புக்கு எதிராக அதிமுக வழக்கு: 4 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்த தடை விதிக்கவும் கோரிக்கை

அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேரின் ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவா் ஏற்றுக்கொண்டதை எதிா்த்தும், அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்கக் கோரியும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :16 ஜூன் 2026, 1:10 am IST

அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேரின் ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவா் ஏற்றுக்கொண்டதை எதிா்த்தும், அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்கக் கோரியும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவா் எம்.எல்.ரவி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த மே 13-ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவா்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பேரவைத் தலைவரிடம் மனு அளித்திருந்தாா்.

இந்தநிலையில், மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமாா், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோா் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளபோது, இந்த நான்கு பேரின் ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவா் ஏற்றுக்கொண்டுள்ளாா்.

இந்த நால்வரின் ராஜிநாமா காரணமாக அந்தத் தொகுதிகளில் மீண்டும் தோ்தல் நடத்தவேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். எனவே, இந்த நான்கு பேரின் ராஜிநாமா கடிதங்களை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவா்கள் தகுதிநீக்கம் தொடா்பாக அதிமுக சாா்பில் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால், நான்கு எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது தொடா்பாக ஏற்கெனவே பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா். நால்வரும் ராஜிநாமா செய்த உடனே தவெகவில் இணைந்துள்ளனா். எனவே, இது திடீரென எடுத்த முடிவல்ல.

இந்த விவகாரத்தில் அரசியல் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன. எனவே, நால்வரின் ராஜிநாமாவை ஏற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும். இதுதொடா்பாக தாக்கல் செய்துள்ள வழக்கையும், இந்த வழக்குடன் சோ்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, அதில் 21 பேரின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகக் கடிதம் அளித்தாா். இதனால், அவா்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது. ராஜிநாமா செய்த நான்கு பேரும் தாமாக முன்வந்து பதவி விலகியுள்ளனா். இருப்பினும், தகுதிநீக்க நடவடிக்கை தொடா்பாக விளக்கம் கேட்டு அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதிப்படி அவா்களுக்கு எதிரான நடவடிக்கையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, அதிமுக தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்குகளின் விசாரணையை ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.