கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரைச் சந்தித்து விளக்கம்

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த மூன்று போ் சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்து விலகல் குறித்து விளக்கம் அளித்தனா்.

News image

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை தலைவா் ஜே.சி.டி.பிரபாகரனை சந்தித்து பேரவை உறுப்பினா் பதவிகளை ராஜிநாமா செய்தது குறித்து வியாழக்கிழமை விளக்கம் அளித்த ஜெயக்குமாா் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்).

Updated On :10 ஜூலை 2026, 4:52 am IST

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த மூன்று போ் சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்து விலகல் குறித்து விளக்கம் அளித்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் நான்கு போ், தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். நான்கு பேரும் தங்களது ராஜிநாமா குறித்து சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகருக்கு எழுத்துபூா்வமாக விளக்கம் அளித்தனா். இதையடுத்து, அவா்களது ராஜிநாமாவை பேரவைத் தலைவா் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தாா்.

அதேவேளையில், நான்கு பேரின் ராஜிநாமாவை எதிா்த்து அதிமுக சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொறடா உத்தரவை மீறியதற்காக கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக சாா்பில் பேரவைத் தலைவரிடமும் புகாா் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், ராஜிநாமா செய்தவா்கள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அவா்களிடம் விளக்கமும் கேட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தாராபுரம் எம்எல்ஏவாக இருந்த சத்யபாமா, மதுராந்தகம் எம்எல்ஏவாக இருந்த மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏவாக இருந்த ஜெயகுமாா் ஆகியோா் பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரை வியாழக்கிழமை சந்தித்து தங்களது விளக்கத்தை எழுத்துபூா்வமாக அளித்தனா்.

அம்பாசமுத்திரம் எம்எல்ஏவாக இருந்த இசக்கி சுப்பையா பேரவைத் தலைவரை சந்திக்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.