பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தவெகவில் இணைகிறாரா சி. விஜயபாஸ்கர்? இபிஎஸ்ஸுக்கு எதிராக தொடர் பதிவு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மறைமுகமாக விமர்சித்துள்ளது பற்றி....

Is C. Vijayabaskar joining TVK, A series of X posts against EPS

சி.வி. சண்முகம் வீட்டில் சி. விஜயபாஸ்கருக்கு பொன்னாடை அணிவித்த முதல்வர் சி. ஜோசப் விஜய். - DIN

Published On :

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ், எஸ்.பி. வேலுமணி என இரண்டாகப் பிரிந்தது. இதன்பின்னர் பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்தன.

இதனிடையே 4 எம்எல்ஏக்கள் மட்டும் ராஜிநாமா செய்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தொகுதி மக்களின் முடிவுக்கேற்ப தனது முடிவை அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

சி. விஜயபாஸ்கர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில்,

"தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’

உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்?

உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?" என்று பதிவிட்டுள்ளார்.

விஜயபாஸ்கர் ஏற்கெனவே தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்த பதிவு மேலும் அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது.

நேற்று, "உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும்.. ‘வெற்றிக்கான பாதை அல்ல.’

வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல… எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம்" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Is C. Vijayabaskar joining TVK, A series of X posts against Edappadi palanisamy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.