அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் உள்பட முன்னாள் எம்எல்ஏக்கள் சுமார் 10 பேர் தவெகவில் இணைந்தனர்.
சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலர் என். ஆனந்த் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜூ, பல்லடம் எம்எஸ்எம் ஆனந்தன் ஆகியோர் இன்று தவெகவில் இணைந்தனர்.
இவர்கள் தவிர அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, சங்ககிரி சுந்தரராஜூ, வீரபாண்டி ராஜமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜூ, கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், சிவகாசி ராஜவர்மன், ஆற்காடு வி.கே.ஆர்.சீனிவாசன் மற்றும் அதிமுகவில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டோர் இன்று தவெகவில் இணைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெ. கருணாநிதியும் இன்று தவெகவில் இணைந்தார்.
பனையூர் அலுவலகத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெ. கருணாநிதி - X
அதிமுகவில் இருந்து தொடர்ச்சியாக பலரும் தவெகவில் இணைந்து வருவது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் அதிமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Former AIADMK ministers join TVK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









