டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் ஜூலை 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், மத்திய முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
டெசோ கூட்டம் கடந்த முறை ஏப்ரல் 15-ஆம் தேதி நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி; இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் விட்டுக் கொடுப்பதாக இருந்தால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 368-ஆவது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்துச் சட்டம் இயற்ற வேண்டும். கச்சத்தீவை விட்டுக் கொடுப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் எதுவும் இயற்றாததால் இலங்கையுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் தீர்மானங்களை விளக்கி ஏப்ரல் 24-ஆம் தேதி திருவான்மியூரில் டெசோ சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும். அதில் டெசோ தலைவர்கள் பேசுவர் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்தக் கூட்டம் டெசோவின் பொதுக்கூட்டமாக நடைபெறாமல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் "சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு டெசோ பணிகள் நடைபெறாமல் இருந்தன. தற்போது மீண்டும் டெசோ அமைப்பு ஜூலை 16-ஆம் தேதி கூடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

