சென்னை தீவுத் திடலில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற 3 நாள் அவகாசம் வேண்டும் என்று உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள சத்தியவாணி நகர் பகுதியில் தெருக்களை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குடிநீர் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வர முடியவில்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதனையடுத்து அந்தப் பகுதிக்கு புதன்கிழமை சென்ற அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் அந்தப் பகுதியில் இருந்த 5 கடைகள் அகற்றப்பட்டன. இதனையடுத்து அங்கு திரண்ட கடைகளின் உரிமையாளர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் கடைகளை தாங்களே அகற்றி விடுவதாகவும், அதற்கு 3 நாள் அவகாசம் வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். இதனையடுத்து அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அவகாசத்துக்குள் கடைகளை அகற்றவில்லையென்றால், அதிகாரிகளே கடைகளை அகற்றி விடுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் சென்றபோது, அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீஸôர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






