சிவகாசி அருகே துரைசாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் தொழிலாளி காயமடைந்தார். துரைசாமிபுரத்தில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் மருந்து எடைபோடும் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த ஏ.துலுக்கபட்டியைச் சேர்ந்த குருசாமி (30) பலத்த காயமடைந்தார்.
இது குறித்து மாரனேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஆலையின் போர்மென் மாரியப்பன் மகன் சீனிவாசன்(30), மேலாளர் நதிக்குடியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ்(27) இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









