கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அவரது உடல் மீட்கப்படாததால் இந்த சம்பவத்தில் மர்மம் நீடித்து வருகிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கோட்டூர்புரத்தைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள பாலத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்பட்டது. தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் இளைஞர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
சில நாள்களுக்கு முன்புதான் அவரது தந்தை இறந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் அந்த இளைஞர், தனக்கு வாழ விருப்பமில்லை என்றும், கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாகவும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் அவரது குடும்பத்தினரிடம் செல்போனில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக கோட்டூர்புரம் பாலத்துக்கு வந்துள்ளனர். அங்கு அந்த இளைஞரின் மோட்டார் சைக்கிள் மற்றும் செருப்பு ஆகியவை இருந்தன.
இது குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தியாகராயநகர் தீயணைப்பு நிலைய அதிகாரி ரவிசந்திரன் தலைமையில் வந்த 4 வீரர்கள் கோட்டூர்புரம் ஆற்றில் அந்த இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்புப் படையினர் மீட்புப் படகு மூலம் இரவு 7 மணி வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட இளைஞரின் உடலை மீட்க இயலவில்லை.
இந்நிலையில்,அந்த இளைஞரின் செல்போனைத் தொடர்பு கொண்ட போது முழுமையாக அழைப்பு சென்று துண்டிக்கப்படுகிறது. செல்போன் இருக்கும் இடத்தை ஆய்வு செய்ததில் அது உத்தரமேரூர் அருகே இருப்பது கண்டறியப்பட்டது.
செல்போனை யாராவது திருடிச் சென்று விட்டனரா அல்லது அந்த இளைஞர் உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது உயிருடன் உள்ளாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேவைப்படும் பட்சத்தில் திங்கள்கிழமை காலையில் தீயணைப்புப் படையினர் மீண்டும் கோட்டூர்புரம் ஆற்றில் தேடும்பணியில் ஈடுபடுவார்கள் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!

அமர்நாத் யாத்திரை எப்போது?

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

அதிரடியாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

