அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

சாலையில் குப்பைகளை கொட்டிய லாரி பறிமுதல்

சென்னையில் சாலையில் குப்பையை கொட்டிய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக லாரிடிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்

Updated On :2 செப்டம்பர் 2013, 3:09 am IST

சென்னையில் சாலையில் குப்பையை கொட்டிய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக லாரிடிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்

வியாசர்பாடி பேசின் பிரிட்ஜ் பாலம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. எம்.கே.பி.நகர் காட்டன் கால்வாயில் சேகரிக்கப்படும் கழிவு குப்பைகளை சிலர் பேசின் பிரிட்ஜ் பாலம் அருகே கொட்டி வந்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதால் வாகன விபத்து ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு இந்தப் பகுதியில் 5 லாரிகளில் கொண்டு வரப்பட்ட மணல், குப்பைகள் கொட்டப்பட்டன. தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி ஆய்வு நடத்தினர்.

அதிகாரிகள் வருவதற்குள் 2 லாரிகள் குப்பைகளை கொட்டிவிட்டு சென்று விட்டது. எஞ்சிய 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரி டிரைவர்கள், கிளீனர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் வியாசர்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.