அதிமுகவில் இருந்து விலகுவதாக அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலர் நடிகை கெளதமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகை கெளதமி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
இன்று(ஜூன் 14) முதல் நான் வகித்து வரும் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கொள்கைப் பரப்பு துணைச் செயலர் பதவியில் இருந்து, தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு, நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

அதிமுகவில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள், பிற அணி மாநில செயலாளர்கள். மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, பேரூர், நகரச் செயலாளர்களையும் மனதார வணங்கி நன்றி கூறி என்னை அதிமுகவில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கெளதமி, கடந்த பிப்ரவரி 2024 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்த நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
Summary
Actress Gautami, the party's Deputy Secretary for Policy Publicity, has announced her resignation from the AIADMK.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










