சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ.155 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டுள்ள செளந்திரபாண்டியன் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்றில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவராவார்.
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த எத்திஸ் குப்தா என்பவர், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தங்களுடைய அறக்கட்டளைக்குச் சொந்தமான 16 கிரவுண்ட் நிலத்தை அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி உமா மகேஸ்வரி என்பவர் அபகரித்துக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த நிலம் தற்போது வெங்கட சுவரூப் ரெட்டி என்பவருக்கு உமா மகேஸ்வரி விற்றுவிட்டதாகவும், அதன் மதிப்பு ரூ.155 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நில மோசடிக்கு சுஜய் ஆனந்த், செüந்திர பாண்டியன் என்ற இருவர் உடந்தையாக இருந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவின் நில மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் உமா மகேஸ்வரி, சுஜய் ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
உமா மகேஸ்வரி மற்றும் சுஜய் ஆனந்த் இருவரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் செüந்திரபாண்டியனை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

பட்டாசு தொழிற்சாலை உரிமையாளா் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினா் சோதனை

கடந்த தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு: கனிமொழி

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

