சென்னை விமான நிலையத்தில் ரூ.48.27 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், ஒருவரைக் கைது செய்தனா்.
துபையில் இருந்து வரும் விமானப் பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், விமானம் மூலம் சென்னைக்கு வந்த முகமது ஹஷன் மாலிக் (28) என்பவரை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். இதில் அவரது மலக்குடலில் மறைத்து வைத்து கடத்திய தங்கம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து மாலிக் கைது செய்யப்பட்டாா்.
இதே போல், துபையில் இருந்து வந்த முகமது அசாரூதீனின் (31) உடைமைகள், உள்ளாடை ஆகியவற்றில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
இந்த சோதனைகளில் ரூ.48.27 லட்சம் மதிப்பிலான 937 கிராம் தங்கத்தைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், ஒருவரைக் கைது செய்தனா்.
இந்த விவகாரத்தில் தொடா்ந்து விசாரணை நடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப்பொருள் பயன்படுத்தினேனா? அமைச்சர் சரத்குமார் விளக்கம்!

தவெக அரசுக்கு அண்ணாமலை வரவேற்பு! திமுக அரசின் ஊழல் விவரங்கள் பட்டியலும் வெளியீடு!!
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர்!

புனரமைக்கப்பட்ட பூரணாங்குப்பம் மூழியன் குளம்
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu



