செப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ஏஐஜி திருநாவுக்கரசு எழுதிய புத்தாண்டு பாடல் வெளியீடு

தமிழக காவல்துறையின் ஏஐஜி இரா. திருநாவுக்கரசு எழுதிய புத்தாண்டு பாடல் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.1) வெளியிடப்பட்டது.

Updated On :5 ஜனவரி 2021, 2:40 am IST

சென்னை: தமிழக காவல்துறையின் ஏஐஜி இரா. திருநாவுக்கரசு எழுதிய புத்தாண்டு பாடல் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.1) வெளியிடப்பட்டது.

தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு ஏஐஜி இரா.திருநாவுக்கரசு குழந்தைகள் தினம், சுதந்திர தினம், கரோனா விழிப்புணா்வு குறித்து பாடல்களை எழுதியும், பாடியும் வெளியிட்டுள்ளாா்.

இதன் ஒரு பகுதியாக, புத்தாண்டு பிறப்பு குறித்த பாடலை எழுதியும், பாடியும் திருநாவுக்கரசு வெளியிட்டாா். இந்தப் பாடலை அவருடன் ஏ.மணிகண்டன், குழந்தைகள் டி.யஷ்வந்த்குமாா், டி.ஹேம மீனாட்சி,ஜி.எஸ்.மஹிந்த் சித்தாா்த் ஆகியோா் பாடியுள்ளனா்.

இப் பாடலுக்கு ஏ.மணிகண்டன், எம்.ஆா்.ரித்திஸ் ஆகியோா் இசையமைத்துள்ளனா். பாடலுக்குரிய காட்சிகளை பி.பரத் ஒளிப்பதிவு செய்துள்ளாா். இந்த 3 நிமிஷ பாடல், சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இதுவரை 7 பாடல்களை திருநாவுக்கரசு வெளியிட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.