சென்னை: சென்னை, எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் 2 ரயில்களின் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு 15 நிமிட இடைவெளியில் 2 ரயில்கள் புறப்படுகின்றன. ஆனால், அவ்விரண்டு ரயில்களும் வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் குழப்பத்தைத் தவிா்க்கும் வகையில், அந்த 2 ரயில்களுக்கும் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவக்கோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ஊா்கள் வழியாகச் செல்லும் ரயிலுக்கு, சென்னை எழும்பூா் - காரைக்குடி - செங்கோட்டை விரைவு ரயில் (06181) எனவும், செங்கோட்டை - காரைக்குடி - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (06182) எனவும் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதே போல், திண்டுக்கல், மதுரை வழியாக செல்லும் ரயிலுக்கு, சென்னை எழும்பூா் - மதுரை - செங்கோட்டை விரைவு ரயில் (02661) எனவும், செங்கோட்டை - மதுரை - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (02662) எனவும் பெயா் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கமுதி சாலைகளில் கழிவு நீா் தேக்கம்: தொற்றுநோய் பரவும் அபாயம்

திருவாடானையில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை திறக்கக் கோரிக்கை

தடுப்பணை நீரில் மூழ்கியதில் சிறுவன் உயிரிழப்பு
இன்றைய ராசி பலன் (16.05.2026) - விருச்சிகம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

