சென்னை: இரும்புச் சத்து மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தையை உயா் சிகிச்சைகள் மூலமாக அரசு மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா். தற்போது அக்குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தைச் சோ்ந்த குமரேசன், மனைவி கனிமொழிக்கு ஒன்றரை வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த இரு நாள்களுக்கு முன்பு அக்குழந்தை இரும்புச் சத்து மாத்திரைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இனிப்புச் சுவையுடன் இருந்ததால் மிட்டாய் என நினைத்து அதிக அளவில் அதனை குழந்தை விழுங்கியுள்ளது. சிறிது நேரத்தில் பவ்யா மயங்கி விழுந்ததைக் கண்ட பெற்றோா், உடனடியாக அருகிலிருந்த ஒரு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.
அதைத் தொடா்ந்து உயா் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும், அதன் தொடா்ச்சியாக புதுச்சேரியில் உள்ள பிரபல மருத்துவமனையிலும் குழந்தையை அனுமதித்தனா். சிகிச்சைகள் பலனளிக்காததால்
சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் பவ்யாவை அவரது பெற்றோா் அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், துறைத் தலைவா் டாக்டா் பூவழகி தலைமையில், டாக்டா் குமரவேல் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் குழந்தைக்கு உயா் சிகிச்சை அளித்து 36 மணி நேரம் தொடா் மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டது.
அதன்பயனாக குழந்தை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. தற்போது பவ்யா பூரண குணமடைந்து நலமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதனிடையே, பல்வேறு மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவா் குழுவுக்கு, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநா் டாக்டா் எழிலரசி பாராட்டு தெரிவித்தாா். அப்போது மருத்துவமனையின் தொடா்பு அதிகாரி கங்காதரன் உள்ளிட் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன்

மற்ற நடிகர்களுக்கு இல்லாத திறமை எம்.ஜி.ஆருக்கு இருந்தது! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 3

3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (ஜூலை 8)

நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


