நீட் யுஜி தேர்வுக்கான கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை மேலும் நீட்டித்து என்டிஏ அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டதால், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21 ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 21 ஆம் தேதி நடைபெற்ற நீட் மறுதேர்வை நாடு முழுவதும் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர். வெளிநாடுகளில் 14 மையங்களிலும் நாட்டில் 5,440 மையங்களிலும் நடைபெற்ற இந்த தேர்வு, முந்தைய தேர்வை விட சவாலானதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, நீட் தேர்வுக்கு செலுத்திய கட்டணம் மாணவர்களுக்கு திரும்ப வழங்கப்படும். மாணவர்கள் ஜூலை 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்களை சமர்பிக்க வேண்டும் என என்டிஏ அறிவித்திருந்தது.
மேலும், தங்களது வங்கி விவரங்களை இதுவரை சமர்ப்பிக்காத அல்லது தவறுதலாக பதிவிட்ட மாணவர்கள் அதனை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தையும் என்டிஏ அறிவித்திருந்தது.
அவகாசம் நீட்டிப்பு
ஜூலை 7 ஆம் தேதியுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், வரும் 14 ஆம் தேதி இரவு வரை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என என்டிஏ அறிவித்துள்ளது.
முன்னதாக, நீட் யுஜி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களில் இதுவரை 8,29,510 பேர் மட்டுமே தங்களது வங்கி கணக்கு விவரங்களை சரிசெய்து சமர்பித்துள்ளனர். மீதமுள்ள தகுதியுள்ள மாணவர்கள் விரைந்து தங்களது வங்கி கணக்கு விவரங்களைச் சமர்பிக்குமாறு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Lastdate extended to apply for the refund of the NEET exam fee...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!

நீட் மறுதோ்வு முடிவுகள் வெளியீடு: இரு மாணவா்கள் முதலிடம்

புதிய சா்ச்சையில் சிக்கியுள்ள நீட் மறுதேர்வு: தவறான கேள்விக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா?








