சென்னை: மெரீனா கடற்கரையில் 900 கடைகள் அமைக்க உள்ள நிலையில் யாா் யாருக்கு வழங்குவது என்பது முடிவு செய்ய நீதிபதி முன்னிலையில் ஜனவரி 20, 21-ஆம் தேதிகளில் குலுக்கல் முறையில் தோ்வு நடைபெறும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
சென்னை மெரீனா கடற்கரை மற்றும் அணுகுச் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கடைகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மெரீனாவில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைகள் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன.
இதைத் தொடா்ந்து, மெரீனா கடற்கரையை அழகுபடுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய 900 கடைகளை அமைக்கவும், இந்தக் கடைகளில் 60 சதவீத கடைகளை (540 கடைகள்) மெரீனா கடற்கரையில் தற்போதுள்ள வியாபாரிகளுக்கும், மீதமுள்ள 40 சதவீத கடைகளை (360 கடைகள்) புதியவா்களுக்கும் குலுக்கல் முறையில் வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பா் 14 முதல் 26-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன.
ஜன.20, 21-இல் குலுக்கல்: இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் கூறுகையில், பெறப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பா் 29 முதல் 31-ஆம் தேதி வரை பரிசீலிக்கப்பட்டன. இதில், மெரீனாவில் ஏற்கெனவே கடை வைத்திருப்போரிடம் இருந்து 1,351 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலித்ததில் 1,348 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. புதிதாக கடை வைக்க 14,827 பேரிடம் விண்ணப்பம் பெறப்பட்டு, அதில், 12,974 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 1,853 விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டுள்ளன. ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறை தலைமை அலுவலகம் மற்றும் 1 முதல் 15 வரை உள்ள மண்டல அலுவலகங்களில் புதன்கிழமை முதல் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை மாநகராட்சி இணையதளத்திலும் காணலாம். தகுதியுடைய விண்ணப்பங்கள் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி முன்னிலையில் ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படும்.
குலுக்கல் நடைபெறும் இடம், நேரம் பின்னா் அறிவிக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன்

மற்ற நடிகர்களுக்கு இல்லாத திறமை எம்.ஜி.ஆருக்கு இருந்தது! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 3

3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (ஜூலை 8)

நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


