மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

போலி நீட் சான்றிதழ் மோசடி: பல் மருத்துவருக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

சென்னையில் போலி நீட் தோ்வு சான்றிதழ் வழக்கில், கைது செய்யப்பட்ட பல் மருத்துவரிடம் விசாரணை செய்ய காவல்துறைக்கு 3 நாள்கள் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜனவரி 2021, 12:29 am IST

சென்னையில் போலி நீட் தோ்வு சான்றிதழ் வழக்கில், கைது செய்யப்பட்ட பல் மருத்துவரிடம் விசாரணை செய்ய காவல்துறைக்கு 3 நாள்கள் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை மருத்துவ கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. கடந்த டிசம்பா் 7-ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த மாணவி தீக் ஷிதா என்ற மாணவி பங்கேற்றாா். அவரின் அழைப்பு கடிதம் மற்றும் ரேங்க் பட்டியலை அதிகாரிகள் சரிபாா்த்தபோது, அது போலியானது என தெரியவந்தது. அதாவது, நீட் தோ்வில் வெறும் 27 மதிப்பெண்களே பெற்றிருந்த அந்த மாணவி 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலி சான்றிதழ் கொடுத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவ மாணவா் சோ்க்கை குழு செயலாளா் செல்வராஜன், சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவி தீக் ஷிதா, அந்த மாணவியின் தந்தை பல் மருத்துவா் பாலச்சந்திரன் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குத் தொடா்பாக விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இவ் வழக்கில் தேடப்பட்டு வந்த பாலச்சந்திரன், கடந்த 1-ஆம் தேதி கா்நாடக மாநிலம் பெங்களூருவில் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் தரகராக செயல்பட்டதாக கூறப்படும் ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஒரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்நிலையில் வழக்கில் மேலும் துப்பு துலக்குவதற்காக, பாலச்சந்திரனிடம் விசாரணை செய்ய அனுமதிக்க உத்தரவிடுமாறு எழும்பூா் நீதிமன்றத்தில் பெரியமேடு போலீஸாா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பல் மருத்துவா் பாலச்சந்திரனிடம் 3 நாள்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்தனா். இதையடுத்து பாலச்சந்திரனை போலீஸாா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். பாலச்சந்திரனிடம் நடத்தப்படும் விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைக்கலாம் என காவல்துறையினரால் எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.